111. (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர்புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெறமாட்டார்கள்.
الترجمة التاميلية
لَن يَضُرُّوكُمۡ إِلَّآ أَذٗىۖ وَإِن يُقَٰتِلُوكُمۡ يُوَلُّوكُمُ ٱلۡأَدۡبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ
இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(ஒரு சொற்ப) சிரமத்தைத் தவிர உங்களுக்கு அவர்கள் அறவே தீங்கு செய்யமுடியாது. உங்களிடம் அவர்கள் போரிட்டால் உங்களுக்கு (தங்கள்) பின்புறங்களைத் திருப்புவார்கள். (புறமுதுகிட்டு ஓடுவார்கள்.) பிறகு உதவி செய்யப்படமாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف