127. (அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான்.
الترجمة التاميلية
لِيَقۡطَعَ طَرَفٗا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَوۡ يَكۡبِتَهُمۡ فَيَنقَلِبُواْ خَآئِبِينَ
(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
Jan Trust Foundation - Tamil translation
நிராகரிப்பாளர்களில் ஒரு பகுதியை அழிப்பதற்காக அல்லது அவர்களை கேவலப்படுத்தி, ஆசை நிறைவேறாதவர்களாக அவர்கள் திரும்புவதற்காக அல்லது அவர்களை மன்னிப்பதற்காக அல்லது அவர்களை வேதனை செய்வதற்காக (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள். (ஆகவே, நபியே!) உமக்கு (அல்லாஹ்வின்) அதிகாரத்தில் எதுவும் இல்லை.
الترجمة التاميلية - عمر شريف