140. நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்த(றிவிப்ப)தற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
الترجمة التاميلية
إِن يَمۡسَسۡكُمۡ قَرۡحٞ فَقَدۡ مَسَّ ٱلۡقَوۡمَ قَرۡحٞ مِّثۡلُهُۥۚ وَتِلۡكَ ٱلۡأَيَّامُ نُدَاوِلُهَا بَيۡنَ ٱلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَيَتَّخِذَ مِنكُمۡ شُهَدَآءَۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّـٰلِمِينَ
உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம், ஈமான் கொணடடோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
Jan Trust Foundation - Tamil translation
உங்களை காயம் (உயிர்ச் சேதம், உடல் சேதம்) அடைந்தால் (அந்த) கூட்டத் தையும் அது போன்ற காயம் அடைந்துள்ளது. அந்த நாள்கள், அவற்றை மக்களுக்கு மத்தியில் சுழற்றுகிறோம். நம்பிக்கையாளர்களை அல்லாஹ் அறிவதற்காகவும், உங்களில் (உயிர் நீத்த) தியாகிகளை எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்தான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
الترجمة التاميلية - عمر شريف