173. (சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள்.
الترجمة التاميلية
ٱلَّذِينَ قَالَ لَهُمُ ٱلنَّاسُ إِنَّ ٱلنَّاسَ قَدۡ جَمَعُواْ لَكُمۡ فَٱخۡشَوۡهُمۡ فَزَادَهُمۡ إِيمَٰنٗا وَقَالُواْ حَسۡبُنَا ٱللَّهُ وَنِعۡمَ ٱلۡوَكِيلُ
மக்களில் சிலர் அவர்களிடம்; "திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" என்று அவர்கள் கூறினார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
"நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்கு (எதிராக) ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்'' என்று (சில) மக்கள் அவர்களுக்கு கூறினர். (அது) அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான்) அதிகப்படுத்தியது. "அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்றும் கூறினார்கள்.
الترجمة التاميلية - عمر شريف