178. நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப்படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மேன்மேலும்,) அதிகரிப்பதற்காகவேதான். மேலும், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
الترجمة التاميلية
وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّمَا نُمۡلِي لَهُمۡ خَيۡرٞ لِّأَنفُسِهِمۡۚ إِنَّمَا نُمۡلِي لَهُمۡ لِيَزۡدَادُوٓاْ إِثۡمٗاۖ وَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ
இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
(தண்டிக்காமல்) நிராகரிப்பவர்கள் நாம் அவர்களுக்கு அவகாசம் அளிப்பதெல்லாம் தங்களுக்கு நல்லதென்று நிச்சயம் எண்ண வேண்டாம். நாம் அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தால் அதிகரிப்பதற்காகவே. இழிவூட்டக்கூடிய வேதனையும் அவர்களுக்குண்டு.
الترجمة التاميلية - عمر شريف