179. (நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரை (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். மறைவானவற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்கமாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கைகொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து)கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.
الترجمة التاميلية
مَّا كَانَ ٱللَّهُ لِيَذَرَ ٱلۡمُؤۡمِنِينَ عَلَىٰ مَآ أَنتُمۡ عَلَيۡهِ حَتَّىٰ يَمِيزَ ٱلۡخَبِيثَ مِنَ ٱلطَّيِّبِۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُطۡلِعَكُمۡ عَلَى ٱلۡغَيۡبِ وَلَٰكِنَّ ٱللَّهَ يَجۡتَبِي مِن رُّسُلِهِۦ مَن يَشَآءُۖ فَـَٔامِنُواْ بِٱللَّهِ وَرُسُلِهِۦۚ وَإِن تُؤۡمِنُواْ وَتَتَّقُواْ فَلَكُمۡ أَجۡرٌ عَظِيمٞ
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
Jan Trust Foundation - Tamil translation
(நயவஞ்சகர்களே!) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். நீங்கள் இருப்பதில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டு விடுபவனாக இல்லை. மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவரை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.
الترجمة التاميلية - عمر شريف