186. (நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (ஆகவே, இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்தவர்களாகவும், அல்லாஹ்வை பயந்தவர்களாகவும் வாழ்ந்துவந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்)... நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.
الترجمة التاميلية
۞لَتُبۡلَوُنَّ فِيٓ أَمۡوَٰلِكُمۡ وَأَنفُسِكُمۡ وَلَتَسۡمَعُنَّ مِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ مِن قَبۡلِكُمۡ وَمِنَ ٱلَّذِينَ أَشۡرَكُوٓاْ أَذٗى كَثِيرٗاۚ وَإِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ فَإِنَّ ذَٰلِكَ مِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
Jan Trust Foundation - Tamil translation
(நம்பிக்கையாளர்களே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆன்மாக்களிலும் நிச்சயம் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மூலமும், இணைவைத்து வணங்குபவர்களின் மூலமும் அதிகமான வசை மொழியை நிச்சயம் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுத்தால், அல்லாஹ்வை அஞ்சினால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க (வீரமிகுந்த) காரியங்களில் உள்ளதாகும்.
الترجمة التاميلية - عمر شريف