20. (நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர்களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி ‘‘நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கிறீர்களா?'' என்று கேட்பீராக. (அவ்வாறே) அவர்களும் தலைசாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் (அதற்காக நீர் கவலைப்படாதீர். நம் தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உம் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறான்.
الترجمة التاميلية
فَإِنۡ حَآجُّوكَ فَقُلۡ أَسۡلَمۡتُ وَجۡهِيَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِۗ وَقُل لِّلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡأُمِّيِّـۧنَ ءَأَسۡلَمۡتُمۡۚ فَإِنۡ أَسۡلَمُواْ فَقَدِ ٱهۡتَدَواْۖ وَّإِن تَوَلَّوۡاْ فَإِنَّمَا عَلَيۡكَ ٱلۡبَلَٰغُۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ
(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; "நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று கேளும்;. அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே! இதற்குப் பின்னும்) அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வுக்கு (முற்றிலும்) எங்கள் முகங்களை பணியவைத்தோம்'' எனக் கூறுவீராக. இன்னும்வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், (சிலை வணங்கும்) பாமரர்களுக்கும் கூறுவீராக: "நீங்களும் (அவ்வாறே உங்கள் முகங்களை) பணியவைக்கிறீர்களா? ''(அவ்வாறே) அவர்களும் பணியவைத்தால் திட்டமாக அவர்கள் நேர்வழி அடைவார்கள். அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால், உம்மீதெல்லாம் (சத்தியத்தை) தெரிவிப்பதுதான் (கடமை). அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன்.
الترجمة التاميلية - عمر شريف