4. (மேலும், நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக்கூடிய (மற்ற)வற்றையும் அருள் புரிந்திருக்கிறான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், (தீயவர்களைத்) தண்டிப்பவன்.
الترجمة التاميلية
مِن قَبۡلُ هُدٗى لِّلنَّاسِ وَأَنزَلَ ٱلۡفُرۡقَانَۗ إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدٞۗ وَٱللَّهُ عَزِيزٞ ذُو ٱنتِقَامٍ
இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
இதற்கு முன்னர் மக்களுக்கு நேர்வழி காட்டியாக (தவ்றாத்தையும் இன்ஜீலையும் இறக்கினான்). (நன்மை தீமையைப்) பிறித்தறிவிக்கக்கூடிய (குர்ஆனாகிய இந்த வேதத்)தையும் இறக்கினான். நிச்சயமாக, அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தவர்களுக்கு கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன்.
الترجمة التاميلية - عمر شريف