75. (நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (ஒரு குறைவுமின்றி) உம்மிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீர் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதைத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். இதன் காரணம்: (தங்கள் இனம் அல்லாத மற்ற) ‘‘பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை'' என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (அல்லாஹ் தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
الترجمة التاميلية
۞وَمِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مَنۡ إِن تَأۡمَنۡهُ بِقِنطَارٖ يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ وَمِنۡهُم مَّنۡ إِن تَأۡمَنۡهُ بِدِينَارٖ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيۡكَ إِلَّا مَا دُمۡتَ عَلَيۡهِ قَآئِمٗاۗ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَالُواْ لَيۡسَ عَلَيۡنَا فِي ٱلۡأُمِّيِّـۧنَ سَبِيلٞ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ
(நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்;. அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்;. அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், 'பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை' என்று அவர்கள் கூறுவதுதான்;. மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நீர்) ஒரு பொற்குவியலில் அவரை நம்பினாலும் (குறைவின்றி) உமக்கு அதை நிறைவேற்றுபவரும் வேதக்காரர்களில் இருக்கிறார். (ஓரே) ஒரு நாணயத்தில் நீர் அவரை நம்பினாலும் அதை உமக்கு (திரும்ப) நிறைவேற்றாதவரும் அவர்களில் இருக்கிறார். அவரிடம் (நீர்) தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் தவிர (அதை கொடுக்க மாட்டார்). இது, (யூதரல்லாத மற்ற) பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தாலும் அது) நம்மீது குற்றமில்லை'' என்று நிச்சயமாக அவர்கள் கூறிய காரணத்தாலாகும். அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
الترجمة التاميلية - عمر شريف