78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்)வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. இன்னும், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது இப்படி பொய் கூறுகின்றனர்.
الترجمة التاميلية
وَإِنَّ مِنۡهُمۡ لَفَرِيقٗا يَلۡوُۥنَ أَلۡسِنَتَهُم بِٱلۡكِتَٰبِ لِتَحۡسَبُوهُ مِنَ ٱلۡكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلۡكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنۡ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنۡ عِندِ ٱللَّهِۖ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ وَهُمۡ يَعۡلَمُونَ
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல "அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்(தை ஓதுவ)தில் தங்கள் நாவைக் கோணுகின்றனர், வேதத்திலுள்ளதுதான் என (நீங்கள்) அதை எண்ணுவதற்காக. அது வேதத்தில் உள்ளதல்ல. "அது அல்லாஹ்விடமிருந்து உள்ளது'' எனக் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதல்ல. அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
الترجمة التاميلية - عمر شريف