79. ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்'' என்று கூறமாட்டார். ஆயினும் (மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் இறையச்சமுடைய நல்லவர்களாக ஆகிவிடுங்கள்'' என்றுதான் கூறுவார்.
الترجمة التاميلية
مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤۡتِيَهُ ٱللَّهُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحُكۡمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُواْ عِبَادٗا لِّي مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن كُونُواْ رَبَّـٰنِيِّـۧنَ بِمَا كُنتُمۡ تُعَلِّمُونَ ٱلۡكِتَٰبَ وَبِمَا كُنتُمۡ تَدۡرُسُونَ
ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்).
Jan Trust Foundation - Tamil translation
வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் ஒரு மனிதருக்கு கொடுக்க, பிறகு மக்களை நோக்கி, "அல்லாஹ்வைத் தவிர்த்து என் அடியார்களாக ஆகிவிடுங்கள்'' என்று கூறுவது அவருக்கு உசிதமல்ல.என்றாலும் (மக்களை நோக்கி), "வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்பிப்பவர்களாக நீங்கள் இருப்பதாலும், (அதை) நீங்கள் கற்றுக் கொள்பவராக இருப்பதாலும் மக்களை சீர்திருத்தம் செய்யும் இறையச்சமுள்ள நிர்வாகிகளாக ஆகிவிடுங்கள்'' (என்றுதான் கூறுவார்).
الترجمة التاميلية - عمر شريف