99. (மேலும்,) கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையை விட்டும் நம்பிக்கையாளர்களை ஏன் தடுக்கிறீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அதைக் கோணலாக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை.
الترجمة التاميلية
قُلۡ يَـٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنۡ ءَامَنَ تَبۡغُونَهَا عِوَجٗا وَأَنتُمۡ شُهَدَآءُۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
"வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
கூறுவீராக: "வேதக்காரர்களே! நம்பிக்கையாளரை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? அதில் கோணலை (-குறையை)த் தேடுகிறீர்கள்! (அதன் உண்மைக்கு) நீங்களே சாட்சிகள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.''
الترجمة التاميلية - عمر شريف