29. ‘‘என் இறைவன் நீதத்தையே கட்டளையிட்டிருக்கிறான். ஒவ்வொரு தொழுகையின்போதும் (மனதில்) அவனையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள். நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு, கலப்பற்ற மனதோடு அவனிடமே நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் உங்களை (இல்லாமையில் இருந்து உலகத்தில்) ஆரம்பமாக படைத்ததுபோல் (நீங்கள் இறந்த பின்னர் மறுமை நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவனிடமே) மீள்வீர்கள்'' என்றும் (நபியே நீர்) கூறுவீராக.
الترجمة التاميلية
قُلۡ أَمَرَ رَبِّي بِٱلۡقِسۡطِۖ وَأَقِيمُواْ وُجُوهَكُمۡ عِندَ كُلِّ مَسۡجِدٖ وَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۚ كَمَا بَدَأَكُمۡ تَعُودُونَ
"என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்" என்று நீர் கூறும்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: “என் இறைவன் நீதத்தை ஏவினான். எல்லா மஸ்ஜிதிலும் (வழிபாட்டில் அல்லாஹ்வை நோக்கி) உங்கள் முகங்களை நிறுத்துங்கள். வழிபடுவதை அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனை அழையுங்கள். அவன் உங்களை ஆரம்பமாக படைத்தது போன்று (அவனிடமே) திரும்புவீர்கள்.”
الترجمة التاميلية - عمر شريف