71. அதற்கவர் ‘‘உங்கள் இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு (விதிக்கப்பட்டு விட்டன. அது) நிச்சயமாக வந்தே தீரும். நீங்களும் உங்கள் முன்னோர்களும் (கடவுள்களென) வைத்துக் கொண்டவற்றின் (வெறும்) பெயர்களைப் பற்றியா நீங்கள் என்னுடன் தர்க்கிக்கிறீர்கள்? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் (உங்களுக்கு) இறக்கி வைக்க வில்லை. ஆகவே, (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறினார்.
الترجمة التاميلية
قَالَ قَدۡ وَقَعَ عَلَيۡكُم مِّن رَّبِّكُمۡ رِجۡسٞ وَغَضَبٌۖ أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ
அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.
Jan Trust Foundation - Tamil translation
“உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும் கோபமும் உங்கள் மீது நிகழ்ந்து விட்டது. நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்த (சிலைகளின்) பெயர்களில் என்னுடன் தர்க்கிக்கிறீர்களா? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை(யே)! ஆகவே, எதிர்பாருங்கள்; நிச்சயமாக, நான் உங்களுடன் எதிர்ப்பார்ப்பவர்களில் இருக்கிறேன்”என்று கூறினார்.
الترجمة التاميلية - عمر شريف