87. (நம்பிக்கையாளர்களே!) உங்கள் இனத்தில் ஒரு கூட்டத்தினர் மட்டும் நான் அனுப்பப்பட்ட தூதுத்துவத்தை நம்பிக்கை கொண்டு, மற்றொரு கூட்டத்தினர் அதை நம்பிக்கை கொள்ளாதிருந்தால் (அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நமக்கிடையில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள். தீர்ப்பளிப்பவர்களிலெல்லாம் அவன் மிக்க மேலானவன்.
الترجمة التاميلية
وَإِن كَانَ طَآئِفَةٞ مِّنكُمۡ ءَامَنُواْ بِٱلَّذِيٓ أُرۡسِلۡتُ بِهِۦ وَطَآئِفَةٞ لَّمۡ يُؤۡمِنُواْ فَٱصۡبِرُواْ حَتَّىٰ يَحۡكُمَ ٱللَّهُ بَيۡنَنَاۚ وَهُوَ خَيۡرُ ٱلۡحَٰكِمِينَ
"உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" (என்றும் கூறினார்).
Jan Trust Foundation - Tamil translation
உங்களில் ஒரு பிரிவினர் நான் அனுப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, (வேறு) ஒரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாதவர்களாக இருந்தால் நமக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை பொறுங்கள். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன். (என்று ஸாலிஹ் கூறினார்)
الترجمة التاميلية - عمر شريف