110. மேலும், நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், ‘‘ஜகாத்' கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் (மரணத்திற்கு) முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டி அனுப்பிவைப்பீர்களோ அதையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். (ஆதலால், இறப்பதற்கு முன்னரே இயன்ற அளவு நன்மை செய்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்.
الترجمة التاميلية
وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ
இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.
Jan Trust Foundation - Tamil translation
தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள். நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்.
الترجمة التاميلية - عمر شريف