130. எவன், தானே மூடனாகி விட்டானோ அவனைத் தவிர இப்றாஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நிச்சயமாக நாம் அவரை இந்த உலகில் தேர்ந்தெடுத்தோம், மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில்தான் இருப்பார்.
الترجمة التاميلية
وَمَن يَرۡغَبُ عَن مِّلَّةِ إِبۡرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفۡسَهُۥۚ وَلَقَدِ ٱصۡطَفَيۡنَٰهُ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّـٰلِحِينَ
இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
Jan Trust Foundation - Tamil translation
மடையனாக ஆனவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தை (வேறு) யார் வெறுப்பார்? திட்டவட்டமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; மறுமையில் நிச்சயமாக அவர் நல்லோரில்தான் இருப்பார்.
الترجمة التاميلية - عمر شريف