132. அதையே இப்றாஹீம் தன் சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஅகூபும் (தன் சந்ததிகளை நோக்கி) ‘‘என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கிறான். ஆதலால், நீங்கள் உண்மையான முஸ்லிம்களாகவே தவிர இறந்துவிட வேண்டாம்'' (என்றே கூறினார்).
الترجمة التاميلية
وَوَصَّىٰ بِهَآ إِبۡرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعۡقُوبُ يَٰبَنِيَّ إِنَّ ٱللَّهَ ٱصۡطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسۡلِمُونَ
இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்."
Jan Trust Foundation - Tamil translation
இப்ராஹீமும், யஅகூபும் அதையே தன் பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள்: "என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக (இஸ்லாம்) மார்க்கத்தை தேர்ந்தெடுத்தான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக இருக்கவே தவிர கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்.''
الترجمة التاميلية - عمر شريف