134. (மேற்கூறிய நபிமார்களாகிய) அந்தக் கூட்டத்தினர் சென்று விட்டனர். அவர்கள் செய்த (நற்)செயல்கள் அவர்களுக்கே (பலனளிக்கும்), நீங்கள் செய்த (நற்)செயல்கள்தான் உங்களுக்கு(ப் பலனளிக்கும்). அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்.
الترجمة التاميلية
تِلۡكَ أُمَّةٞ قَدۡ خَلَتۡۖ لَهَا مَا كَسَبَتۡ وَلَكُم مَّا كَسَبۡتُمۡۖ وَلَا تُسۡـَٔلُونَ عَمَّا كَانُواْ يَعۡمَلُونَ
அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அது சென்றுவிட்ட சமுதாயம். அது செய்தது அதற்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி (நீங்கள்) விசாரிக்கப்படமாட்டீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف