151. அவ்வான்ற, உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றையும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே நாம் அனுப்பிவைத்தோம்.
الترجمة التاميلية
كَمَآ أَرۡسَلۡنَا فِيكُمۡ رَسُولٗا مِّنكُمۡ يَتۡلُواْ عَلَيۡكُمۡ ءَايَٰتِنَا وَيُزَكِّيكُمۡ وَيُعَلِّمُكُمُ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمۡ تَكُونُواْ تَعۡلَمُونَ
இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.
Jan Trust Foundation - Tamil translation
ஒரு தூதரை உங்களுக்கு உங்களிலிருந்து நாம் அனுப்பியதற்காக (வும் என்னைப் பயப்படுங்கள்). அவர் உங்கள் மீது நம் வசனங்களை ஓதுகிறார்; உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார்; நீங்கள் அறிந்திருக்காதவற்றையும் உங்களுக்குக் கற்பிக்கிறார்.
الترجمة التاميلية - عمر شريف