171. (அறியாமையில் தங்கள் மூதாதைகளைப் பின்பற்றும்) அந்த நிராகரிப்பாளர்களின் உதாரணம், (அர்த்தத்தை உணராது) கூச்சலையும் ஓசையையும் மட்டும் கேட்கக்கூடியதின் (அதாவது கால்நடைகளின்) உதாரணத்தை ஒத்திருக்கிறது. (மேலும், அவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர். ஆதலால், அவர்கள் (எதையும்) அறிந்து கொள்ளவே மாட்டார்கள்.
الترجمة التاميلية
وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُواْ كَمَثَلِ ٱلَّذِي يَنۡعِقُ بِمَا لَا يَسۡمَعُ إِلَّا دُعَآءٗ وَنِدَآءٗۚ صُمُّۢ بُكۡمٌ عُمۡيٞ فَهُمۡ لَا يَعۡقِلُونَ
அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்;. அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்;. அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நிராகரிப்பாளர்களின் உதாரணம் அழைப்பையும் சப்தத்தையும் தவிர (வேறு எதையும்) கேட்காததைக் கூவி அழைப்பவரின் உதாரணத்தைப் போன்றாகும். (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (சிந்தித்து) புரியமாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف