210. (நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களை நிராகரிக்கின்ற அவர்கள்) அல்லாஹ்வும் வானவர்களும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டுவரப்படும்.
الترجمة التاميلية
هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن يَأۡتِيَهُمُ ٱللَّهُ فِي ظُلَلٖ مِّنَ ٱلۡغَمَامِ وَٱلۡمَلَـٰٓئِكَةُ وَقُضِيَ ٱلۡأَمۡرُۚ وَإِلَى ٱللَّهِ تُرۡجَعُ ٱلۡأُمُورُ
அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வும் வானவர்களும் மேகங்களின் நிழல்களில் அவர்களிடம் வருவதையும் காரியம் முடிக்கப்படுவதையும் தவிர (வேறெதையும்) எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படும்.
الترجمة التاميلية - عمر شريف