34. பின்னர், நாம் வானவர்களை (நோக்கி) “ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்'' எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமைகொண்டு விலகி (நம் கட்டளையை) நிராகரிப்பவர்களில் ஆகி விட்டான்.
الترجمة التاميلية
وَإِذۡ قُلۡنَا لِلۡمَلَـٰٓئِكَةِ ٱسۡجُدُواْ لِأٓدَمَ فَسَجَدُوٓاْ إِلَّآ إِبۡلِيسَ أَبَىٰ وَٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
Jan Trust Foundation - Tamil translation
ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! ஆகவே, இப்லீஸைத் தவிர (அனைவரும்) சிரம் பணிந்தார்கள். (அவன்) மறுத்தான்; பெருமையடித்தான்; நிராகரிப்பாளர்களில் ஆகிவிட்டான்.
الترجمة التاميلية - عمر شريف