51. இன்னும் (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற் குள்ளாகவே) நீங்கள் வரம்புமீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்.
الترجمة التاميلية
وَإِذۡ وَٰعَدۡنَا مُوسَىٰٓ أَرۡبَعِينَ لَيۡلَةٗ ثُمَّ ٱتَّخَذۡتُمُ ٱلۡعِجۡلَ مِنۢ بَعۡدِهِۦ وَأَنتُمۡ ظَٰلِمُونَ
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் மூசாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, ஒரு காளைக்கன்றை அவருக்குப் பின்னர் (தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். நீங்கள் அநியாயக்காரர்கள்.
الترجمة التاميلية - عمر شريف