60. மூஸா தன் இனத்தாரு(டன் ‘தீஹ்' என்னும் பகுதிக்குச் சென்ற சமயத்தில் தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுக்)குத் தண்ணீர் தேடியபோது (நாம் அவரை நோக்கி) “நீங்கள் உங்கள் தடியால் இக்கல்லை அடியுங்கள்'' எனக் கூறினோம். (அவர் அவ்வாறு அடித்ததும்) உடனே அதில் இருந்து பன்னிரண்டு ஊற்றுகள் உதித்தோடின. (அவருடைய பன்னிரண்டு பிரிவு) மக்கள் அனைவரும் தாங்கள் அருந்தும் தண்ணீர்த் துறையைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள். (அப்பொழுது நாம் அவர்களை நோக்கி “உங்களுக்கு) அல்லாஹ் கொடுத்த (‘மன்னு மற்றும் ஸல்வா' என்னும் உணவு பதார்த்தத்)திலிருந்து புசியுங்கள். (கல்லிலிருந்து உதித்தோடும் இந்நீரைப்) பருகுங்கள். ஆனால், பூமியில் கடுமையாக விஷமம் செய்துகொண்டு அலையாதீர்கள்'' (என்று கூறினோம்).
الترجمة التاميلية
۞وَإِذِ ٱسۡتَسۡقَىٰ مُوسَىٰ لِقَوۡمِهِۦ فَقُلۡنَا ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡحَجَرَۖ فَٱنفَجَرَتۡ مِنۡهُ ٱثۡنَتَا عَشۡرَةَ عَيۡنٗاۖ قَدۡ عَلِمَ كُلُّ أُنَاسٖ مَّشۡرَبَهُمۡۖ كُلُواْ وَٱشۡرَبُواْ مِن رِّزۡقِ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, "உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; "அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
Jan Trust Foundation - Tamil translation
மூசா தனது சமுதாயத்திற்குத் தண்ணீர் தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். "நீர் உம் தடியால் கல்லை அடிப்பீராக!'' எனக் கூறினோம். அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பீறிட்டன. மக்கள் எல்லாம் தங்கள் குடிக்குமிடத்தை திட்டமாக அறிந்தார்கள். அல்லாஹ்வின் உணவிலிருந்து புசியுங்கள்; பருகுங்கள். பூமியில் விஷமிகளாக இருந்து வரம்பு மீறி விஷமம் செய்யாதீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف