64. இதற்குப் பின்னும் நீங்கள் (வாக்கு) மாறிவிட்டீர்கள். ஆனால், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனது அன்பும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்.
الترجمة التاميلية
ثُمَّ تَوَلَّيۡتُم مِّنۢ بَعۡدِ ذَٰلِكَۖ فَلَوۡلَا فَضۡلُ ٱللَّهِ عَلَيۡكُمۡ وَرَحۡمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ
அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
பிறகு, அதன் பின்னர் (வாக்கிலிருந்து புறக்கணித்து) திரும்பிவிட்டீர்கள். உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனின் கருணையும் இல்லையென்றால் நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகியிருப்பீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف