65. மேலும், சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்காதீர்கள் என்ற தடையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி ''நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!'' எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தே இருக்கிறீர்கள்.
الترجمة التاميلية
وَلَقَدۡ عَلِمۡتُمُ ٱلَّذِينَ ٱعۡتَدَوۡاْ مِنكُمۡ فِي ٱلسَّبۡتِ فَقُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.
Jan Trust Foundation - Tamil translation
சனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளையை) மீறியவர்களையும் எனவே, "சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்!'' என அவர்களுக்கு நாம் கூறியதையும் திட்டமாக அறிந்து கொண்டீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف