105. நிச்சயமாக நாம் ‘ஜபூர்' என்னும் வேதத்தில், நல்லுபதேசங்களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம், ‘‘நிச்சயமாக பூமிக்கு என் அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தான் வாரிசாவார்கள்'' என்று.
الترجمة التاميلية
وَلَقَدۡ كَتَبۡنَا فِي ٱلزَّبُورِ مِنۢ بَعۡدِ ٱلذِّكۡرِ أَنَّ ٱلۡأَرۡضَ يَرِثُهَا عِبَادِيَ ٱلصَّـٰلِحُونَ
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
Jan Trust Foundation - Tamil translation
“லவ்ஹுல் மஹ்ஃபூழ்”(-விதியின் தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர். (இறைத்தூதர்கள் மீது இறக்கப்பட்ட) வேதங்களில் திட்டவட்டமாக நாம் எழுதினோம். (விதித்தோம்). “நிச்சயமாக (சொர்க்கத்தின்) பூமி -அதை எனது நல்லடியார்கள் அனந்தரமாக அடைவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف