3. அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறென்ன? நீங்கள் பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகிறீர்களா?'' என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
الترجمة التاميلية
لَاهِيَةٗ قُلُوبُهُمۡۗ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَى ٱلَّذِينَ ظَلَمُواْ هَلۡ هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡۖ أَفَتَأۡتُونَ ٱلسِّحۡرَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ
அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?" என்று கூறிக்கொள்கின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களது உள்ளங்கள் (அறிவுரையை) அலட்சியம் செய்கின்றன. அநியாயக்காரர்கள் (தங்களுக்கு மத்தியில்) பேச்சை பகிரங்கப்படுத்திக் கொண்டனர். (அதில்) “இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறில்லை. நீங்கள் அறிந்துகொண்டே சூனியத்தை (-இந்தக் குர்ஆனை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” (என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.)
الترجمة التاميلية - عمر شريف