45. (நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவற்றையே! (நான் சுயமாக எதையும் கூறவில்லை)'' என்று கூறுவீராக. (எனினும், இவர்கள் செவிடர்களைப் போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டால் அதை அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
الترجمة التاميلية
قُلۡ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلۡوَحۡيِۚ وَلَا يَسۡمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ
"நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்" என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: நான் உங்களை எச்சரிப்பதெல்லாம் வஹ்யின் மூலமாகத்தான். செவிடர்கள் எச்சரிக்கப்படும்போது (நேர்வழியின் சத்திய) அழைப்புக்கு செவிசாய்க்க மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف