48. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம்.
الترجمة التاميلية
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ
இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
Jan Trust Foundation - Tamil translation
திட்டவட்டமாக பிரித்தறிவிக்கக்கூடிய (சத்தியத்)தையும் வெளிச்சத்தையும் (-வேதத்தையும்) இறையச்சமுள்ளவர்களுக்குரிய அறிவுரையையும் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் கொடுத்தோம்.
الترجمة التاميلية - عمر شريف