7. (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம் தூதராக அனுப்பவில்லை. (உமக்கு அறிவிப்பது போன்றே நம் கட்டளைகளை) அவர்களுக்கும் வஹ்யி (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி கூறுவீராக. இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் (முன்னுள்ள வேத) ஞானமுடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
الترجمة التاميلية
وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே "(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்" (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
Jan Trust Foundation - Tamil translation
உமக்கு முன்னர் நாம் (மனிதர்களில் உள்ள) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) நாம் (தூதர்களாக) அனுப்பவில்லை. அவர்களுக்கு (-அந்த ஆடவர்களுக்கு) நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (முந்திய) வேதத்தையுடையவர்களிடம் நீங்கள் கேட்டறிந்து கொள்ளுங்கள், நீங்கள் அறியாதவர்களாக இருந்தால்.
الترجمة التاميلية - عمر شريف