74. லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களில் இருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
الترجمة التاميلية
وَلُوطًا ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗا وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَت تَّعۡمَلُ ٱلۡخَبَـٰٓئِثَۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَٰسِقِينَ
இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் லூத்தை நினைவு கூர்வீராக! (மக்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கின்ற ஆற்றலையும் கல்வி ஞானத்தையும் நாம் அவருக்கு கொடுத்தோம். அசிங்கங்களை செய்துகொண்டு இருந்த ஊரிலிருந்து நாம் அவரை பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக, பாவிகளாக இருந்தார்கள்.
الترجمة التاميلية - عمر شريف