78. தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்.
الترجمة التاميلية
وَدَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ إِذۡ يَحۡكُمَانِ فِي ٱلۡحَرۡثِ إِذۡ نَفَشَتۡ فِيهِ غَنَمُ ٱلۡقَوۡمِ وَكُنَّا لِحُكۡمِهِمۡ شَٰهِدِينَ
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
Jan Trust Foundation - Tamil translation
தாவூது இன்னும் சுலைமானை நினைவு கூர்வீராக! அவ்விருவரும் விவசாயத்தின் விளைச்சலில் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக! அதில் (அந்த விளைச்சலில் வேறு) மக்களுடைய ஆடுகள் (இரவில்) நுழைந்த போது... (அவை விளைச்சலை மேய்ந்து நாசப்படுத்தி விட்டன.) அவர்களின் (தாவூது, சுலைமான் மற்றும் அந்தக் கூட்டத்தார்களின்) தீர்ப்பை நாம் அறிந்தவர்களாக இருந்தோம்.
الترجمة التاميلية - عمر شريف