10. நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து எதையும் அறவே தவிர்த்துவிட முடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டைகள்.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ لَن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـٔٗاۖ وَأُوْلَـٰٓئِكَ هُمۡ وَقُودُ ٱلنَّارِ
நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையிலிருந்து) எதையும் அவர்களை விட்டும் அறவே தடுக்காது. அவர்கள்தான் நரகத்தின் எரிபொருள்கள்.
الترجمة التاميلية - عمر شريف