73. ‘‘உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்'' (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்.'' (மேலும், அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) ‘‘உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றி கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!'' (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவன் ஆவான்.
الترجمة التاميلية
وَلَا تُؤۡمِنُوٓاْ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمۡ قُلۡ إِنَّ ٱلۡهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤۡتَىٰٓ أَحَدٞ مِّثۡلَ مَآ أُوتِيتُمۡ أَوۡ يُحَآجُّوكُمۡ عِندَ رَبِّكُمۡۗ قُلۡ إِنَّ ٱلۡفَضۡلَ بِيَدِ ٱللَّهِ يُؤۡتِيهِ مَن يَشَآءُۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٞ
"உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;. உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவரைத் தவிர (ஒரு முஸ்லிமை நம்பாதீர்கள்), நீங்கள் கொடுக்கப்பட்டது போன்று ஒருவர் கொடுக்கப்படுவார் என்றோ அல்லது (முஸ்லிம்கள்) உங்கள் இறைவனிடம் உங்களோடு தர்க்கிப்பார்கள் என்றோ நம்பாதீர்கள்'' (என்று கூறினர்). (நபியே!) கூறுவீராக: "நிச்சயமாக நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்.'' (நபியே!) கூறுவீராக: "நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. (அவன்) நாடியவருக்கு அதைக் கொடுக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன்.''
الترجمة التاميلية - عمر شريف