37. எவன் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கி, அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்தும் கூறுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? (இவ்வுலகில் அவர்கள் உயிர் வாழும் வரை) அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவு, பொருள் ஆகிய)வை அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். (அவர்களுடைய காலம் முடிந்து) அவர்களுடைய உயிரைக் கைப்பற்ற நம் வானவர்கள் அவர்களிடம் வரும் சமயத்தில் (அவர்களை நோக்கி) நீங்கள் ‘‘கடவுளென அழைத்துக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘‘(அவை அனைத்தும்) எங்களை விட்டு (ஓடி) மறைந்துவிட்டன'' என்று கூறி, மெய்யாகவே அவர்கள் (சத்தியத்தை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள் என்று தங்களுக்கு எதிராகவே சாட்சியம் கூறுவார்கள்.
الترجمة التاميلية
فَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِـَٔايَٰتِهِۦٓۚ أُوْلَـٰٓئِكَ يَنَالُهُمۡ نَصِيبُهُم مِّنَ ٱلۡكِتَٰبِۖ حَتَّىٰٓ إِذَا جَآءَتۡهُمۡ رُسُلُنَا يَتَوَفَّوۡنَهُمۡ قَالُوٓاْ أَيۡنَ مَا كُنتُمۡ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا وَشَهِدُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ أَنَّهُمۡ كَانُواْ كَٰفِرِينَ
எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) "அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) "அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்" என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? விதியில் இவர்களுடைய பாகம் இவர்களை அடையும். இறுதியாக, இவர்களை உயிர் வாங்குபவர்களாக நம் (வானவத்) தூதர்கள் இவர்களிடம் வந்தால் அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் எங்கே?” என்று கூறுவார்கள். “அவர்கள் எங்களை விட்டு மறைந்தனர்”என்று கூறி, நிச்சயமாக தாங்கள் நிராகரிப்பவர்களாக(வே) இருந்தனர் என்று தங்களுக்கு எதிராக சாட்சியளிப்பார்கள்.
الترجمة التاميلية - عمر شريف