10. (ஏனென்றால்) அவர்களுடைய உள்ளங்களில் (வஞ்சகம் என்னும்) நோய் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு (அந்)நோயை அல்லாஹ் அதிகப்படுத்தியும் விட்டான். (இவ்விதம்) அவர்கள் பொய் சொல்வதனால் மிக்க துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
الترجمة التاميلية
فِي قُلُوبِهِم مَّرَضٞ فَزَادَهُمُ ٱللَّهُ مَرَضٗاۖ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمُۢ بِمَا كَانُواْ يَكۡذِبُونَ
அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களின் உள்ளங்களில் ஒரு நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் நோயை அதிகப்படுத்தினான். அவர்கள் பொய் கூறுபவர்களாக இருந்த காரணத்தால் துன்புறுத்தக்கூடிய வேதனை அவர்களுக்கு உண்டு.
الترجمة التاميلية - عمر شريف