108. (நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இத்தகைய கேள்விகளைக் கேட்டு) தன் நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியைவிட்டு மெய்யாகவே தவறிவிட்டார்.
الترجمة التاميلية
أَمۡ تُرِيدُونَ أَن تَسۡـَٔلُواْ رَسُولَكُمۡ كَمَا سُئِلَ مُوسَىٰ مِن قَبۡلُۗ وَمَن يَتَبَدَّلِ ٱلۡكُفۡرَ بِٱلۡإِيمَٰنِ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ
இதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவனொருவன் ஈமானை 'குஃப்ரினால்' மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.
Jan Trust Foundation - Tamil translation
(இதற்கு) முன்னர் மூசா கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க நாடுகிறீர்களா? எவர் நம்பிக்கைக்குப் பகரமாக நிராகரிப்பை மாற்றுவாரோ அவர் திட்டமாக நேர்வழியைத் தவறினார்.
الترجمة التاميلية - عمر شريف