123. இன்னும், ஒரு நாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள். அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவுக்கு எவ்வித பயனுமளிக்காது. அதனிடமிருந்து ஒரு பரிகாரமும் ஏற்கப்பட மாட்டாது; எவ்வித பரிந்துரையும் அதற்குப் பயன்தராது. மேலும், அவர்கள் (யாராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية
وَٱتَّقُواْ يَوۡمٗا لَّا تَجۡزِي نَفۡسٌ عَن نَّفۡسٖ شَيۡـٔٗا وَلَا يُقۡبَلُ مِنۡهَا عَدۡلٞ وَلَا تَنفَعُهَا شَفَٰعَةٞ وَلَا هُمۡ يُنصَرُونَ
இன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது; அதனிடமிருந்து பரிகாரம் ஏற்கப்படாது; பரிந்துரை அதற்குப் பலனளிக்காது; அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف