13. மேலும், அவர்களை நோக்கி “(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினால், (அதற்கு) “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?'' என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் அறிவீனர்கள். ஆனால், (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
الترجمة التاميلية
وَإِذَا قِيلَ لَهُمۡ ءَامِنُواْ كَمَآ ءَامَنَ ٱلنَّاسُ قَالُوٓاْ أَنُؤۡمِنُ كَمَآ ءَامَنَ ٱلسُّفَهَآءُۗ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلسُّفَهَآءُ وَلَٰكِن لَّا يَعۡلَمُونَ
(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
Jan Trust Foundation - Tamil translation
"(நல்ல) மக்கள் நம்பிக்கை கொண்டது போன்று நம்பிக்கை கொள்ளுங்கள்'' என அவர்களுக்குக் கூறப்பட்டால், "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? எனக் கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள். எனினும், (அதை) அறிய மாட்டார்கள்.
الترجمة التاميلية - عمر شريف