139. ‘‘நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (உடைய பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (உடைய பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே கலப்பற்றதாக ஆக்குவோம்'' என்றும் கூறுவீராக!
الترجمة التاميلية
قُلۡ أَتُحَآجُّونَنَا فِي ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمۡ وَلَنَآ أَعۡمَٰلُنَا وَلَكُمۡ أَعۡمَٰلُكُمۡ وَنَحۡنُ لَهُۥ مُخۡلِصُونَ
அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்" என்று (நபியே! அவர்களுக்கு) நீர் கூறுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
"நீங்கள் அல்லாஹ்வின் விசயத்தில் நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? அவன்(தான்) எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான்! எங்கள் செயல்கள் (அவற்றின் பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (அவற்றின் பலன்) உங்களுக்கே; நாங்கள் அவனுக்கே வழிபாட்டை கலப்பின்றி செய்பவர்கள்'' எனக் கூறுவீராக!
الترجمة التاميلية - عمر شريف