146. எவர்களுக்கு நாம் வேதம் கொடுத்திருக்கிறோமோ அவர்கள் தங்கள் பிள்ளை களை(ச் சந்தேகமற) அறிவதைப் போல் அ(ந்த மக்காவின் திசையளவில் நீங்கள் திரும்பித் தொழுவீர்கள் என்ப)தை அறிவார்கள். ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.
الترجمة التاميلية
ٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يَعۡرِفُونَهُۥ كَمَا يَعۡرِفُونَ أَبۡنَآءَهُمۡۖ وَإِنَّ فَرِيقٗا مِّنۡهُمۡ لَيَكۡتُمُونَ ٱلۡحَقَّ وَهُمۡ يَعۡلَمُونَ
எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
நாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவதைப் போன்று அதை அறிவார்கள். நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர், அவர்கள் அறிந்தே உண்மையை மறைக்கிறார்கள்.
الترجمة التاميلية - عمر شريف