149. ஆகவே, (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமின்' பக்கமே உமது முகத்தைத் திருப்புவீராக. நிச்சயமாக இதுதான் உமது இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும். (ஆகவே, இதைப் பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே!) நீங்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
الترجمة التاميلية
وَمِنۡ حَيۡثُ خَرَجۡتَ فَوَلِّ وَجۡهَكَ شَطۡرَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۖ وَإِنَّهُۥ لَلۡحَقُّ مِن رَّبِّكَۗ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ
ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்' பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக! நிச்சயமாக இது (கட்டளை) உம் இறைவனிடமிருந்து (வந்த) உண்மைதான். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
الترجمة التاميلية - عمر شريف