16. இவர்கள்தான் நேரானவழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
الترجمة التاميلية
أُوْلَـٰٓئِكَ ٱلَّذِينَ ٱشۡتَرَوُاْ ٱلضَّلَٰلَةَ بِٱلۡهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَٰرَتُهُمۡ وَمَا كَانُواْ مُهۡتَدِينَ
இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கியவர்கள். எனவே, அவர்களின் வியாபாரம் இலாபமடையவில்லை. அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை.
الترجمة التاميلية - عمر شريف