160. ஆயினும், அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, (வேதங்களில் தாம் மறைத்தவற்றை) சீர்திருத்தி, அவற்றை (மனிதர்களுக்குத்) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்து விடுவேன். நானோ மிக்க மன்னிப்பாளன்; மிகக் கருணையாளன்.
الترجمة التاميلية
إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَـٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
Jan Trust Foundation - Tamil translation
எவர்கள் மன்னிப்புக்கோரி, சீர்திருத்தி, (தாங்கள் மறைத்ததை) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. அவர்களை மன்னிப்பேன். நான் மகா மன்னிப்பாளன்; மகா கருணையாளன்.
الترجمة التاميلية - عمر شريف