164. (அவன்) வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்கின்ற கப்பல்களிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி அதைக்கொண்டு (வறண்டு) இறந்துவிட்ட பூமியை அல்லாஹ் உயிர்ப்பி(த்துச் செழிப்பாக்கி வை)ப்பதிலும், கால்நடைகள் அனைத்தையும் பூமியில் பரவவிட்டிருப்பதிலும், காற்றை(ப் பல கோணங்களில் திருப்பி)த் திருப்பி விடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அமர்த்தப்பட்டிருக்கும் மேகத்திலும், (மனிதர்களுக்குள்ள பயன்களை ஆராய்ந்து) சிந்திக்கும் மக்களுக்கு (அவனுடைய அருளையும், அன்பையும் ஆற்றலையும் அறிவிக்கக்கூடிய) பல அத்தாட்சிகள் நிச்சயமாக இருக்கின்றன.
الترجمة التاميلية
إِنَّ فِي خَلۡقِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفِ ٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱلۡفُلۡكِ ٱلَّتِي تَجۡرِي فِي ٱلۡبَحۡرِ بِمَا يَنفَعُ ٱلنَّاسَ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن مَّآءٖ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَآبَّةٖ وَتَصۡرِيفِ ٱلرِّيَٰحِ وَٱلسَّحَابِ ٱلۡمُسَخَّرِ بَيۡنَ ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக வானங்கள் இன்னும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறுவதிலும் மனிதர்களுக்கு பலன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் (மழை) நீரை இறக்கி, அதன் மூலம் பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதிலும், எல்லாக் கால்நடைகளைப் பூமியில் பரப்பியதிலும், காற்றை(ப் பலகோணங்களில்) திருப்பி விடுவதிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும் சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு திட்டமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
الترجمة التاميلية - عمر شريف