167. தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொரு முறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழி காட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக் கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.
الترجمة التاميلية
وَقَالَ ٱلَّذِينَ ٱتَّبَعُواْ لَوۡ أَنَّ لَنَا كَرَّةٗ فَنَتَبَرَّأَ مِنۡهُمۡ كَمَا تَبَرَّءُواْ مِنَّاۗ كَذَٰلِكَ يُرِيهِمُ ٱللَّهُ أَعۡمَٰلَهُمۡ حَسَرَٰتٍ عَلَيۡهِمۡۖ وَمَا هُم بِخَٰرِجِينَ مِنَ ٱلنَّارِ
(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்; "நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்." இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான். அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.
Jan Trust Foundation - Tamil translation
பின்பற்றியவர்கள் கூறுவார்கள்: (உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு முடிந்தால் அவர்கள் எங்களைவிட்டு விலகிக் கொண்டதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிக் கொள்வோம். இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்களுக்கு மனவேதனைகளாக அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறுபவர்களாக இல்லை.
الترجمة التاميلية - عمر شريف