179. அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள்.
الترجمة التاميلية
وَلَكُمۡ فِي ٱلۡقِصَاصِ حَيَوٰةٞ يَـٰٓأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.
Jan Trust Foundation - Tamil translation
அறிவாளிகளே! நீங்கள் (பழிவாங்கப்படுவதை) பயந்துகொள்ள வேண்டுமே! பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை(யின் பாதுகாப்பு) உண்டு.
الترجمة التاميلية - عمر شريف